முருகன் அடியார்களே
ஆலய கட்டிட பணிகளின் வெளிதோற்ற வேலைகள் (Råbygg)இனிதே நிறைவு்றும் வேளையில் ஆலயத்தின் உட்பகுதி வேலைகள் ஆரம்பிப்பதற்காக கட்டிட குழு சார்பில் இருவர் இந்திய கட்டிட ஸ்தபதியான முத்தையா ஸ்தபதி அவர்களை சந்தித்துள்ளனர். ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் செய்து முடிக்பட்டு, தயார் நிலையில் உள்ள கர்பக்கிரக(ஆதிமூலம்)அர்த்தமண்டப கட்டிட பொருட்களை சரிபார்த்ததுள்ளனர்.
ஸ்தபதியுடன் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு மேலதிக வலுசேர்பதற்காக அவரது இரு மகன்மார்களையும் ஓப்பந்தத்தில் இணைத்துள்ளதுடன் கட்டிட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒழுங்கும் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவில் இருந்து சிற்பிகள் இங்கு வந்து வேலைகள் ஆரம்பிப்பதற்கு தங்களின் விரைவான பங்களிப்பை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.