மூலஸ்தானத்திற்கான சிற்ப கருங்கற்களை அடியார்கள் வாங்கி ஆலயத்திற்கு வழங்குவதற்கான ஓர்அரிய சந்தர்ப்பம்.
அன்பான அடியார்களே!
ஆலய 2ம் கட்ட வேலைகள் தை மாதத்தில் முடிவடைகிறது. 3ம் கட்ட வேலைகளை தொடர்வதற்கு குறைந்தது 6 மில்லியன் குரோணர்கள் (egenkapital) தேவையாகவுள்ளது. இப்பணம் அடியார்களாகிய தங்களிடமிருந்து மிகக்குறுகிய காலத்தில் கிடைத்தால் வங்கியிலிருந்து 20 மில்லியன் கடன் கிடைக்கும் சாத்தியமுள்ளது. இப்பணத்தைக்கொண்டு 3ம் கட்டத்தின் பெரும்பகுதி வேலைகளை பூர்த்தியாக்கலாம்.
இப்பணத்தை திரட்டுவதற்கு நாம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதில் ஓர் முயற்சியாக ஆலய பிரதம குருக்களாலும் பல அடியார்களாலும் முன்வைக்கப்பட்ட ஆலோசனையை செயல்படுத்தவூள்ளோம். அதாவது தை மாதாத்தில் இந்தியாவிலிருந்து OSlo வந்தடையூம் முருகனுக்குரிய ஆதிமூல அர்த்தமண்டப சுவருக்குரிய சிற்பக்கற்களை அடியார்களாகிய தங்களின் பெயர்களில் திருப்பணியில் இணைத்து கொள்வதற்கு முடிவுசெய்துள்ளோம். ஜரோப்பாவில் அமைக்கப்பட்ட பல ஆலயங்களில் இப்படியான செயற்பாடு அடியார்களால் வரவேற்கப்பட்ட நிகழ்வாகும். முதல் கட்டத்தில் 120 கற்கள் திருப்பணியில் இணைத்துகொள்ளப்படவுள்ளது.
2-3 மாதங்களில் மிகுதி 120 வந்ததவுடனும் இதேபோல் திருப்பணியில் இணைத்துகொள்ளப்படும். அதன்பின்னர் பிள்ளையார் அம்மன் மற்றும் விமானத்திற்குரிய கற்கள் செதுக்கப்பட்டு திருப்பணியில் இணைத்துகொள்ளப்படும் என்பதையூம் மகிழ்ச்சியயுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். ஆகையால் விரும்பும் அடியார்கள் எல்லோருக்கும் கற்களை வாங்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் சாத்தியமுள்ளது.
அடியார்கள் ஒரு கல்லை 3000 குரோணர்களுக்கு கொள்வனவு செய்து ஆலயத்திற்கு வழங்கலாம். ஓர் குடும்பத்துக்கு முதல் கட்டத்தில் 1 கல் தான் ஒதுக்கப்படும். முதல் கட்டத்தில் 120 இற்கு குறைவான அடியார்கள் பதிவு செய்தால் ஒரு கல்லிற்கு மேல் வாங்க விரும்பும் அடியார்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் இக்கற்களில் உங்கள் பெயர் பொறிக்கப்படமாட்டாது. அடியார்கள் தங்கள் விருப்பத்தை தை 15 இலிருந்து தை 22 இற்குள் பதிவூ செய்யவேண்டும்.
பதிவு செய்யூம் முறை
ஆலயத்தில் இதற்கான ஒர் படிவம் வைக்கப்பட்டுள்ளது. அப்படிவத்தில் உங்கள் பெயர் விலாசம் மின்னஞ்சல், தொலைபேசி இலக்கத்தை குறிப்பிடவேண்டும். நீங்கள் மின்னஞ்சல் post@kovil.noமூலமும் பதிவூ செய்யலாம். மின்னஞ்சலில் உங்கள் பெயர்இ விலாசம்இதொலைபேசி இலக்கத்தை குறிப்பிடவேண்டும். 23 ம் திகதியிற்கு பின் கட்டடக்குழு தங்களுடன் தொடர்புகொள்வார்கள். இருக்கும் கற்களின் எண்ணிக்கையை விட அடியார்களின் பதிவூ கூடுதலாக இருந்தால் இதுவரை ஆலய நிர்மானப்பணிக்கு அதிக பணம் செலுத்தியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தங்களை கல்லிற்கு நிதி செலுத்தும்படி கட்டடகுழுவினர் வேண்டியபின்னர் தாங்கள் கல்லிற்கான பணத்தை ஒரு வாரத்திற்குள் ஆலய வங்கிக்கணகிற்கு 6060 05 76162 செலுத்தவும்.
வங்கிக்கணகிற்கு பணம் செலுத்தமுடியாதவர்கள் மாத்திரம் ஆலயத்தில் நேரடியாக பணத்தை செலுத்தலாம்.
நிதி நெருக்கடியை குறைப்பதற்காக முன்னெடுக்கப்படும் இம்முயற்சிக்கு தங்கள் ஆதரவையூம் ஒத்துழைப்பையயும் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இங்கனம்
கட்டடகுழு, ஆலய நிர்வாகம்
ஆலய தொலைபேசி: 22251301