அன்பான சிவசுப்பிரமணியர் ஆலயத் திருத்தொண்டர்களே!
ஆலய கட்டிட பணிகள் தங்களது பங்களிப்புடனும் வங்கி கடனுடனும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையிலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. மேலும் இந்திய சிற்பிகளின் வேலைப்பாடுகளில் முருகனுக்கு உரிய ஆதிமுலம், அர்தமண்டம் பெரும்பாலும் முடிவுற்ற நிலையில் தொடர்ந்து பணிகளை முன்னெடுத்து முருகனின் விமானம், வினாயகர், அம்மன், சிவன், பார்வதி, பலிபீடம், நவக்கிரகம், கொடிமரம், வயிரவர் சுவாமிகளுக்குரிய ஆலயங்களை அமைத்து கும்மாபிசேகம் செய்யும் நிலைக்கு பூர்த்தி செய்வதற்கு இன்றைய நிலையில் 7 மில்லியன் குரோணர்கள் தேவைப்படுவதால் தங்களால் ஏற்கனவே வழங்கப்பட்ட பங்களிப்புடன், மேலதிக நிதி வழங்கக்கூடிய வசதி இருந்த்தால் பங்களிப்பை வழங்குங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.
புதிய ஆலயத்திற்கான கட்டிட நிதியை பின்வரும் முறையில் சேர்ப்பதாக திட்டமிடப்பட்டது: 25 மில்லியன் குறோணர்களை அடியார்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதாகவும் 20 மில்லியன் குறோணர்களை வங்கியிலிருந்து கடன் பெறுவதாகவும் மீதித் தொகையை ஆலய நிர்வாகத்தால் சேமித்து தரப்படும் என்பதாகும். இத்திட்டம் பொதுச்சபையின் முடிவுக்கு ஆலய கட்டிட வேலைகள் தொடங்க முன்னர் முன்வைக்கப்பட்டது. எமது மதிப்பீடு குறைந்தது 1000 குடும்பங்கள் தலா 25000 குறோணர்கள் வழங்குவார்கள் என்பதாகும். ஆனால் இது வரை அடியவர்களிடமிருந்து கிடைக்கப்பட்ட தொகை 15 மில்லியன் குறோணர்களாகும்;. அடியவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட தொகையில் 10 மில்லியன் குறோணர்கள் கட்டடநிதியிற்கு இதுவரை கிடைக்காததால் ஆலய வேலைகள் தாமதமாகிறது. அத்துடன் ஒவ்வொரு வருடமும் விலைவாசி உயர்வு புள்ளிவீதப்படி(indeksregulering) கட்ட நிறுவனத்திற்குரிய கொடுப்பனவுகள் அதிகரிக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
அனைத்து நிதியும் ஆலயக் கட்டட நிதியாகச் செலுத்தப்பட்டு பொதுக் கட்டடமாக அமைய வேண்டுமென்பதே ஆரம்பக் கோட்பாடாக அமைந்திருந்தது. ஆயினும் தற்போதைய இக்கட்டான நிலையைக் கருத்திற்கொண்டு இந் நிலையிலிருந்து சில தளர்வுடனான மாற்றங்களை ஏற்படுத்தவேண்டி உள்ளது. இதன்படி ஒரு தனிப்பட்டவரோ அல்லது ஒரு குழுவினரோ ஆலயத்தின் ஒரு பகுதியை அமைப்பதற்கு உரிமை கோரா உபயம் செய்தலை ஏற்றுக் கொள்ளுதல்.
சில வரையறைகள்:
- முற்கூட்டியே குறைந்தது 25000,- குரேணர்களை கட்டட நிதிக்கு வழங்கியிருத்தல் வேண்டும்.
- ஓர் சன்னிதியை முழுமையாகப் பூர்த்தி செய்வதற்குப் பலர் முன்வருமிடத்து, இவர்களில் முதலில் பணம் செலுத்தியவருக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.
- ஓர் சன்னிதியை இருவர் தனித்தனியாக செய்ய முன்வந்தால் அங்கத்தவராகவுள்ளவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்
- ஒரு பகுதிக்குப் பலரும் இணைந்தும்( எல்லோரின் சம்மதத்துடன்) பகிர்ந்தும் பங்களிப்பைச் செய்யலாம்.
- கொடுக்கப்படும் பணத்தொகை மற்றும் செயற்பாடு என்பவை ஆவணப்படுத்தப்படுவதுடன் அத்தாட்சிப் பத்திரமும் உபயதாரர்களுக்கு வழங்கப்படும். ஆனால் வேறு எந்தவகையிலும் இவர்கள் இவற்றிற்கான உரிமையைக் கோரமுடியாது.
முதற்கட்டமாக பிள்ளையார், அம்மன் சந்நிதிகளும் விமானமும் இம்முறையில் செய்யப்படும். ஏனைய சந்நிதிகளை அமைப்பதற்கு விரும்புபவர்கள் உடனே பதிவு செய்யவும். அம்மன், பிள்ளையார் சந்நிதானங்களுக்கான கற்களுக்காகச் சிலர் பணம் செலுத்தியுள்ளார்கள். உதாரணமாக விநாயகர் சந்நிதியை அமைப்பதற்கு மொத்தமாக 640000,- குரோணர்கள் தேவை. இதற்காக இதுவரையில் கற்களுக்காக 100000,- குரோணர்கள் அடியார்களால் வழங்கப்பட்டுள்ளது. எனவே விநாயகர் சந்நிதியை நிறைவடையச் செய்பவர் 540000,- குரோணர்களைச் செலுத்தவேண்டும்.
இந் நடவடிக்கைக்குச் சிலர் தமது அனுசரணையை வழங்கலாமென முன்னரே தெரிவித்திருந்தார்கள். இவ்விடயம் நடைபெறவிருந்த பொதுச்சபை கூட்டத்தில் முன்வைக்கப்ப்டவிருந்தது. தற்போதைய சூழ்நிலையை கருத்தில்கொண்டு இம் மாற்றத்தை ஆலய நிர்வாகமும் கட்டிடகுழுவும் ஆலய வளர்ச்சியை கருத்தில்கொண்டு உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக முடிவு செய்துள்ளார்கள்.
மிகவும் மகிழ்ச்சியான செய்தி
இதுவரை அம்மன் சந்நிதிக்கு ஏற்கனவே சிற்பக்கல்லிற்காக அடியவர்களால் வழங்கப்பட்ட தொகயை விட மிகுதியாக தேவைப்படும் 540000 குறோணர்களை வழங்குவதாக ஓர் அடியவர் குடும்பம் முன்வந்துள்ளனர்.
அதேபோல் இரு குடும்பங்கள் இணைந்து 5 லட்சம் குறோணர்களை கொடித்தம்பத்திற்கும் அதற்குரிய பீடக்கல்லிற்கும் வழங்க முன்வந்துள்ளனர். அதேசமயம் இன்னும் ஒரு குழு தாங்களும் கொடித்தம்பத்திற்கான செலவை ஏற்றுக்கொள்ளுவதாக விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
வைரவர் சந்நிதிக்கும் மூவர் முழுத் தொகையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்கள். அத்துடன் இன்னும் சிலர் மற்றைய சந்திகளுக்கு பகுதித் தொகைகளை வழங்க முன் வந்துள்ளார்கள்.
இதுவரை எமக்கு இந்தியாவிலிருந்து கிடைக்கப்பெற்ற விலை விபரங்களை கீழே உள்ள பட்டியலில் தந்துள்ளோம். தாங்கள் உபயங்கள் ஏதாவது செய்ய விரும்பினால் எம்முடன் உடனடியாக தொடர்புகொள்ளவும்.
இங்கனம்
கட்டடக்குழு மற்றும் ஆலய நிர்வாகம்