4 மில்லியன் குரோணர்கள் பற்றாக்குறையால் ஆலய இறுதிக்கட்ட வேலைகளுக்கான ஒப்பந்தம் தாமதமாகிறது

4 மில்லியன் குரோணர்கள் பற்றாக்குறையால் ஆலய இறுதிக்கட்ட வேலைகளுக்கான ஒப்பந்தம் தாமதமாகிறது.

ஆலய மூன்றாம் கட்டட பணியிற்கு, அதாவது அமரூட்டிலிருந்து ரொம்மனுக்கு முருகனை கொண்டுசெல்வதற்கு ஏற்றபடி கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு குறைந்தது, சொந்த பணம் இன்னும் 4 மில்லியன குரோணர்கள் அவசரமாக தேவைப்படுகிறது. இப்பணத்தை அடியவர்களிடமிருந்து சேர்த்தால் மட்டும் தான் வங்கியினால் உறுதியளித்த 20 மில்லியன் குரோணர்களை கடனாக பெற்று ஆலய கட்டடத்தை பாவனைக்குட்படுத்துவதற்குரிய மட்டத்தில் பூர்த்தி செய்யலாம். கட்டட நிறுவனம் நாம் 25 மில்லியன் குரோணர்களுக்கனா உத்தரவதாம் வழங்கினால் தான் 3 கட்ட வேலைகளை தொடர்வார்கள்.

நாம் பல கடினமான கட்டங்களை கடந்து இறுதிக்கட்ட‌த்தை அடைந்துள்ளோம். 4 மில்லியன் குரோணர்கள் எமது தமிழ் மக்களால் இலகுவில் அடையக்கூடிய ஒர் தொகையாகும். புதிய ஆலயத்தை திட்டமிடும்போது ஒர் குடும்பம் 25000 குரோணர்கள் வழங்குவார்கள் என பல அடியார்கள் கூறினார்கள். இதுவரை நிதி வழங்காதவர்களும், சிறிய தொகை வழங்கிய அடியார்களும் விரைவாக நிதி வழங்கி முருகனை எதிவரும் Mai (2020) மாதத்திற்கு புதிய ஆலயத்திற்கு பிரவேசிக்க வழிவகுப்பீர்களாக.

Ammerud ஆலய கட்டிடத்திலிருந்து நாம் august 2020 இல் வெளியேற வேண்டும் என்பதை அடியார்களின் கவனத்திற்கு இங்கு கொண்டுவருகிறோம்

GIVE DONATION TO TEMPLE DEVLOPMENT

en_USEnglish