புதிய ஆலய கட்டிட வேலைகளின் விபரங்களும் ஆலய சிற்ப வேலைகளுக்கான தற்போதைய நிதி நிலைமையும் – 02.10.2020

புதிய ஆலய கட்டடவேலைககளின் நோர்வேஜிய கட்டட ஒப்பந்தகாரரின் வேலைகள் ஜப்பசி மாதத்தில் முடிவடையும் என மிக மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். ஆலய உட்புற சந்நிதிகளையும் நிலத்திற்கு flis பதிக்கும் வேலைகள் தவிர மற்றைய வேலைகள் யாவும் முடிவடையும் நிலையுள்ளது. ஆலய கிழ் மண்டபம் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது இவ்வேலைகள் முடிவடைந்தததும் தற்காலிக பாவனை அனுமதியை (midlertidig brukstilltelse) மாநகரசபையில் பெறமுடியும் என எதிபார்க்கிறோம். ஆலயத்தை மார்கழி 31.12 வரை அமரூட்டில் நடாத்துவதற்கு OBOSஇடம் அனுமதி பெற்றுள்ளோம்.

துர்க்கை அம்மன் சந்நிதி, கொடித்தம்பம், கொடித்தம்பகல், நவக்கிரகம், மற்றும் ஆறுமுகசாமி சந்நிதி, நடராஜர் நாராயணண், லட்சுமி வைரவர் சந்நிதிகள் கட்டுவதற்கான முழு செலவுகளையும் முற்றாக அடியவர்கள் பொறுப்பேற்றுள்ளனர். சிவன், பார்வதி, சண்டிகேஸ்வரர் சந்நிதிகளுக்கு பகுதியாக செலவுகளை அடியவர்கள் பொறுப்பேற்றுள்ளனர். அடியவர்களுக்கு கொடுக்கப்பட்ட விலைகள் மதிப்பீpட்டு விலைகளாகும். இவ்விலைகள்( இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால்) சில காரணிகளில் தங்கியுள்ளன, இறக்குமதி செய்யப்படும்போது நாணய மாற்று விகிதம், இறக்குமதி செலவு, மற்றும் சந்நிதிகள் கட்டப்படும் நாட்களின் எண்ணிக்கையில் தங்கியுள்ளது. விமானத்திற்குரிய செலவில் ஒரு சிறிய பகுதியை (kr. 250000) அடியவர்கள் வழங்கியுள்ளார்கள். இதுவரை நிதி அனுசரணை கிடைக்கெப்பெறாத சந்நிதிகள்: விநாயகர் (கற்களுக்கு kr. 100000 அடியவர்கள் வழங்கியுள்ளார்கள்) வசந்தமண்டபம், பலிபீடம், மயூரமாகும். மற்றும் மிகுதியாகவுள்ள வேலைகளுக்கு இன்னும் 5 மில்லியன் (கும்பாபிசேகம் செய்யவதற்கு முடிக்கப்பட வேண்டிய வேலைகள்) குறோணர்கள் தேவையாகவுள்ளது.

இவ்வாண்டு ஐப்பசி மாதத்திலிருந்து நாம் வங்கியில் எடுத்த கடனை மீள கட்ட தொடங்க வேண்டும். இதுவரை செய்யப்படாத வேலைகளில் தான் பெரும்பாலான சிற்பவேலைகள் அடங்குகிறது. இச்சிற்ப வேலைகளை எமது எமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டுவதற்கும், எமது இனம் ஐரோப்பியர்களுக்கு முன்னரே சிற்பக்கலைகளில் முன்னோடியான சமுதாயம் என காட்டுவதற்கும், எல்லா தமிழர்களும் வேறுபாடுகளை தவிர்த்து நோர்வேயில் இவ்வாலயத்தை சீராக அமைப்போம்;. ஆலயத்தின் அழகிற்கு சிற்பவேலைகள் தான் மெருகூட்டும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

இந்திய சிற்பிகளின் இந்தியாவில் விநாயகர் துர்க்கை சந்நிதிகளை கருங்கல்லில் சிற்ப வேலைகளுடன்;; அமைத்து கொண்டிருக்கிறார்கள். கும்பாபிசேகம் செய்வதற்கு ஆலயத்திற்கு விமானம் (கற்பகக்கிரகத்திற்கு மேல் அமைந்திருக்கும் கோபுரம்) அமைக்கப்படவேண்டும். விமானத்தை கருங்கல்லில் சிற்ப வேலைகளுடன் செதுக்குவதற்கு தங்களிடமிருந்தும் விரைவில் நிதி கிடைத்தால் தான் வேலைகளை இந்தியாவில் ஆரம்பிக்கலாம்;;. விமானத்தை கல்லில் செதுக்க குறைந்தது 5 மாதங்கள் வேண்டும். விரைவில் அடியவர்கள் புதிய ஆலய கட்டிடத்தின் உள் பகுதியை பார்வையிட ஒழுங்குகள் செய்யப்படும். தங்களால் இயன்ற நிதியுதவியை தொடர்ந்து வழங்குமாறு வேண்டுகிறோம்.

‘மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்’

இங்கனம்
கட்டடகுழு, ஆலய நிர்வாகம்

GIVE DONATION TO TEMPLE DEVLOPMENT

en_USEnglish